அரச ஊழியர்களின் வயது வரம்பெல்லை அதிகரிப்பு!

அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக வயது வரம்பை திருத்தியமைக்க வேண்டும்.

வயது வரம்பு 38

அதற்கமைய ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் கீழ் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்ட 10000 ரூபா கொடுப்பனவு இந்த மாதத்தில் இருந்து முழுமையாக கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.