தோசை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.

தோசையில் பிளைன் தோசை, மசால் தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, மற்றும் கல் தோசை போன்ற பல வகை உண்டு.

அந்தவகையில், தோசை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

தோசையில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.

தோசை மாவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் இருப்பதால், எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. இதனால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தோசையில் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த மூலமாக விளங்குகிறது.

மேலும் தோசையின் நொதித்தல் செயல்முறை, இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மையை அதிகரித்து ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது.

தோசையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தருவதால் அதிகமாக உணவு உட்கொள்வது தடுக்கப்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தோசையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் நீடித்த ஆற்றலை வழங்கி, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

செலியாக் நோய் மற்றும் பசையம் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க தோசையை தாராளமாக சாப்பிடலாம்.