மாலைத்தீவு வறட்சிக்கு உதவ முன்வரும் சீனா

மாலைதீவில்(Maldives) காலநிலை மாற்றத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சீன(China) அரசு 1,500 தொன் குடிநீரை மாலைதீவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

அந்தவகையில் திபெத்தில் உள்ள பனிப்பாறைகளிலிருந்து தண்ணீரை பெற்று சீன அரசு மாலைதீவுக்கு வழங்கியுள்ளது.

மாலைத்தீவு அரசு மகிழ்ச்சி
இதனையடுத்து மாலைத்தீவு அரசு இது தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் கையொப்பம் இட்ட ஒப்பந்தத்தின் கீழ் மாலைதீவுகள் சீனாவின் இராணுவத்திடமிருந்து இலவசமாக இராணுவ உபகரணங்களையும் பயிற்சியையும் பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மாலைதீவுகளில் 26 பவளப்பாறைகள் மற்றும் 1192 தீவுகள் ஆகியவை பவளப்பாறைகள் மற்றும் மணல் திட்டுகளால் ஆனவை.

இந்தக் காலநிலை மாற்றத்தால் நிலத்தடி நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளது.

குடிநீருக்கும் கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன்படி மாலைத்தீவின் நகர்ப்புற மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சீனா தற்போது முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.