யாழ் கடற்கரையில் மீட்க்கப்பட்ட இளைஞனின் சடலம்!

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சடலமானது, இன்றையதினம் ( 01.04.2024) காலை மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

மட்டக்களப்பு – பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார்.

மேலதிக விசாரணை

இவர் தொழில் நிமித்தமாக கடலுக்குள் சென்றிருந்த நிலையில் நேற்றையதினம் காணாமல் போயுள்ளார்.

இதன் பின்னரே, இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.