ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவு!

இந்தியா – இலங்கை இடையே கடந்த 1974ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கச்சதீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது  என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்(S. Jaishankar ) விளக்கமளித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது கச்சதீவு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது 

இந்நிலையில் கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

1974ஆம் ஆண்டு கடல் எல்லையை எங்கே வைப்பது என்று இந்தியா – இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, அப்போது, வரையப்பட்ட எல்லையின்படி, கச்சதீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.