யாழில் ஆலயம் சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்!

   யாழ்ப்பாணத்தில் ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியை சேர்ந்த 68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு சென்று வழிபட்ட பின்னர் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பியவர் இயலாத நிலையில் வயல் வரம்பொன்றில் அமர்ந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.