சஜித்தை விவாதத்திற்கு அழைக்கும் அனுர

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa), தமது கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கவுடனான (Anura Kumara Dissanayake) பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய பகிரங்க விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti), ஊடக சந்திப்பு ஒன்றின்றி கருத்து தெரிவிக்கும்போது, போது இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார (Nalin Bandara) மற்றும் ஹர்ஷ. டி. சில்வா ( Harsha de Silva) ஆகியோர் விடுத்த பகிரங்க விவாத சவாலை ஏற்றுக்கொள்ள தமது கட்சி தயாராக இருப்பதாகவும், அதனை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறும் ஹந்துன்நெத்தி கோரியுள்ளார்.

பொருளாதாரக் கொள்கைகள் 

மேலும் அவர், “தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விவாதம் நடத்துவது நல்லதொரு நகர்வாகும்.

அதன் மூலம், அவர்களின் கொள்கைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும். என்றும் தெரிவித்த, ஹந்துன்நெத்தி, சஜித் பிரேமதாசவுடன் விவாதத்திற்கு அனுரகுமார திஸாநாயக்க தயாராகவே இருக்கின்றார்.

பொது மக்கள் ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைகளை ஓரளவுக்கு பொறுப்புணர்வோடு நேரடியாக அறிந்து கொள்வது முக்கியம். கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) ஆகியோருடன் விவாதிப்பது அர்த்தமற்றது.

இந்தநிலையில், சஜித் பிரேமதாச விவாதத்திற்கு விரும்பாவிட்டால், அதனை எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.