மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு

லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பீஸ்ஸ கெசல்வத்த பகுதியில் உள்ள கும்புக்கன் ஓயாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லுணுகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு நேற்று (05) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹோப்டன், லுணுகலை பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த 3ஆம் திகதி காலை லுணுகலை நகருக்குச் சென்றுவிட்டு இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து உறவினர்கள் நேற்று லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் கும்புக்கன் ஓயாவில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.