தினமும் இரண்டு கராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கிராம்பு உணவுக்கு வாசனை மற்றும் சுவையை கூட்டுவதை தாண்டி கிராம்பு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் அமைகிறது.

கிராம்பு மரத்தின் உலர்ந்த பூக்களில் இருந்து பெறப்படும் கிராம்புகள் ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்த ஒரு மசாலா பொருளாகும்

இப்பொழுது கிராம்பு சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வாய்வழி ஆரோக்கியம்

வாய்வழி ஆரோக்கிய பலன்களுக்கு கிராம்பு பெயர் போனது. நாம் ஏற்கனவே கூறியது போல கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது

செரிமான ஆரோக்கியம்

கிராம்புகள் பாரம்பரியமாக செரிமானத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்புகள் சாப்பிடுவதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு

கிராம்புகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. இது ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது. எனினும் இந்த விளைவுகளை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

ஆன்டி-ஆக்சிடன்ட்கள்

கிராம்புகளில் எக்கச்சக்கமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் அது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்பில் வலி நிவாரண பண்புகளும் உள்ளது.

மிதமான அளவுகளில் கிராம்பு சாப்பிடுவது பெரும்பாலான நபர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உண்டாகும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்வது அவசியம். கிராம்பு எண்ணெயை அதிகப்படியாக பருகும் பொழுது அதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே கிராம்பு எண்ணெயை அதிக அளவில் சாப்பிட கூடாது.