க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற தயாராக இருந்த மாணவன் உயிரிழப்பு!

  க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் ஆலயத்துக்கு வழிபடச் சென்ற மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத் துயர சம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலாங்கொடை மாரதென்னையை சேர்ந்த அரினாத் ரஞ்சித் குமார் என்ற மாணவனே, நேற்று (06) இவ்வாறு உயிரிழந்தார்.

மயங்கி விழுந்த மாணவன் 

மயங்கி விழுந்த மாணவன் மரதன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.