தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்!

ஏக்கல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று பிற்பகல் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு  7 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதுடன், தொழிற்சாலையின் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன.

எவ்வாறாயினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.