வீசா மோசடி தொடர்பில் ஆட்சேபனை வெளியிட்டுள்ள சஜித்

விமான நிலையத்தில் வீசா பிரச்சினைக்கு எதிராகப் பேசிய இளைஞர் சந்தரு குமாரசிங்கவிடம் (Sandaru Kumarasinghe) வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆட்சேபனை வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை விரைவில் முடித்துவைக்க அரசாங்கம் செயற்பட வேண்டும் என நேற்று (07.05.2024) நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிணைமுறி மோசடி

சந்தரு குமாரசிங்க தனது கருத்தை மாத்திரமே வெளிப்படுத்தியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் கருத்துச் சுதந்திரத்திற்கு அவருக்கு உரிமை உண்டு.

எனினும், முன்னதாக வீசா மோசடியானது பிணைமுறி மோசடியை விட பெரிய மோசடியாக இருக்கக்கூடும் என்றும் சஜித் பிரேமதாச கூறிய கருத்து சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளது.