மன்னா ரமேஷ் வீட்டிலிருந்து மீட்க்கப்பட்ட கைக்குண்டு!

டுபாயிலிருந்து இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்படைய மன்னா ரமேஷிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ​​அவிசாவளை, யலகம, நாபாவெல பகுதியில் உள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கைக்குண்டு வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த நிலையிலும் மோட்டார் சைக்கிள் வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சந்தேகநபர் குற்றப் பிரிவில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் தெற்கு மாவட்ட குற்றப் பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கையொப்பத்துடன் நடத்தப்படும். என தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9/1 ஆவது பிரிவின்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்துடன், திகதி அடிப்படையிலான தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.