உயர்வடைந்த அமெரிக்க டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு (Dollar) நிகரான இலங்கை ரூபாவின் (LKR) பெறுமதி நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (08.05.2024) சிறிய வீழ்ச்சி ஒன்றை பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.92 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.38 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஸ்ரேலிங் பவுண்ட் (sterling pound) ஒன்றின் விற்பனை விலை 380.90 ரூபாயாகவும் கொள்வனவு விலை 366.22 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

யூரோவின் பெறுமதி

மேலும், யூரோ (Euro) ஒன்றின் விற்பனை பெறுமதி 327.94 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 314.52 ரூபாவாகவும் உள்ளது.

அத்துடன், கனேடிய டொலரின் (Canadian Dollar) விற்பனை விலை 222.11 ரூபாவாகவும், கொள்வனவு விலை 212.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.