அதிபர் தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி

2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் மாதம் 17 முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள் கோரப்படும்.

கட்டுப்பண தொகை

அத்தோடு, அதிபர் தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை அதிகரிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்நாயக்க (A.L Ratnayake) தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானமானது,  நாடாளுமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், ஏனைய பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரின் யோசனைகளின் அடிப்படையிலேயே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தனித்து இதனை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.