பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது சஜித் காட்டம்!

மேல்மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 6,000 வெற்றிடங்களில் 2,951 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வர்த்தகப் பிரிவுப் பட்டதாரிகளில் 1,200 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும், ஒரு வர்த்தக பட்டதாரிக்கேனும் இதுவரை நியமனம் கிடைக்கவில்லை. இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு இன்று (10) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.