கிளிநொச்சியில் சிக்கிய பாரியளவான போதைப்பொருள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்த முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளையும் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவையும் கைவிட்டு ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இதேபோன்று கிளிநொச்சி பொலிஸ் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலையடுத்து வீதியில் சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து  260 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா போதைப்பொருளும் மோட்டார் சைக்கிளும் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.