பேருந்து சாரதியுடன் காதல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பாடசாலை மாணவி!

பாடசாலை மாணவியொருவரை ஏமாற்றி ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று காரொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 வயது பாடசாலை மாணவியொருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பாடசாலை பஸ் சேவை சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியுடன் காதல்

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பாடசாலை பஸ் சேவை சாரதியும் பஸ்ஸின் உரிமையாளருமான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை சந்தேகநபரும் பாதிக்கப்பட்ட மாணவியும் பாடசாலை பஸ் சேவையின் போது அறிமுகமாகியுள்ள நிலையில் இருவரும் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.