இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலின் சிறையில் இருப்பார்!

  இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலினும் சிறையில் இருப்பார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால் ஊடகங்களை சந்தித்துக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 75 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் சந்திக்காத இன்னல்களை ஆம்ஆத்மி கட்சி சந்தித்துள்ளது. என்னை கைது செய்ததன் மூலம், நாட்டில் யாரை வேண்டுமானாலும் சிறைக்குத் தள்ள முடியும் என பா.ஜ.க நிரூபித்துள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர்களை எதிர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.