அடுத்தடுத்து விவாகரத்து பெறும் சினிமா பிரபலங்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் தனுஷ் விவாகரத்து பெற்றது மட்டுமின்றி, அவரது நண்பர்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதிகள் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், தனுஷின் நண்பர்கள் ஏன் இவ்வாறு அடுத்தடுத்து விவாகரத்து பெறுகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனுஷ்-ஐஸ்வர்யா
நடிகர் தனுஷும், இயக்குனர் ஐஸ்வர்யாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். மேலும் சில மாதங்களுக்கு முன்பு பரஸ்பர விவாகரத்தையும் பெற்றுக்கொண்ட நிலையில், இவர்களின் பிள்ளைகான யாத்ரா மற்றும் லிங்காவை கோ-பேரண்டிங் முறையில் வளர்த்து வருகின்றனர்.

செல்வராகவன்-சோனியா அகர்வால்..
தனுஷின் அண்ணன் மற்றும் சோனியா அகர்வால் தம்பதிகள் கடந்த 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் 14 ஆண்டுகளுக்கு பின்பு திருமணம் செய்ததுடன், தற்போது செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.

டிடி-ஸ்ரீகாந்த்
தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி கடந்த 2014ம் ஆண்டு சிறுவயது நண்பரான ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திரையுலக பிரபலங்களுடன் டிடி நெருக்கமான நண்பராகவும் இருந்தார். அவர் நண்பராக இருந்தவரில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். கடந்த 2017ம் ஆண்டு சுசி லீக்ஸ் புகைப்படத்தில் டிடியின் புகைப்படமும் வெளியான நிலையில், அதே ஆண்டில் தனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் நடித்த டிடி திடீரென கணவரை பிரிந்தார்.

சமந்தா நாகசைதன்யா
நடிகை சமந்தாவும் தனுஷும் 2015ம் ஆண்டு தங்கமகன் படத்தில் இணைந்து நடித்ததுடன், நல்ல நண்பர்களாகவும் இருந்தனர். இந்நிலையில், 2017ம் ஆண்டு நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 2021ம் ஆண்டில் அவரை பிரிந்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் சைந்தவி..
தனுஷின் நண்பர்களுள் ஒருவர், ஜி.வி.பிரகாஷ், தனது சிறுவயது பள்ளி தோழியான சைந்தவியை காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதுடன், இந்த தம்பதிகளுக்கு அன்வி என்ற பெண்குழந்தையும் உள்ளது. 22 ஆண்டுகள் காதலுக்கு பின்பு தற்போது இந்த ஜோடிகள் விவாகரத்து பெறும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்கள் மட்டுமின்றி அமலா பால்-ஏ.எல்.விஜய், கார்த்திக் குமார்-ஆர்.ஜே.சுசித்ரா உள்ளிட்ட இந்த பிரபலங்களும் தனுஷின் நண்பர்கள் லிஸ்டில் காணப்படுகின்றனர்.

அடுத்தடுத்து பிரிந்து செல்லும் பிரபலங்கள் தனுஷிற்கு நண்பர்களாக உள்ள நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை சம்பந்தப்படுத்தி பேசு வருகின்றனர். ஆனால் எது என்னவாக இருந்தாலும் தனுஷ் இதனை எதையும் கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்த்து வருகின்றனர்.