சரிகமப நிகழ்ச்சியில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் சரிகமப இசை நிகழ்வில் வீரபாண்டிக்கு முச்சக்கரவண்டியை ஜீ தமிழ் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற டெடிகேஷன் சுற்றில் போட்டியாளர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த உறவுகளுக்காக பாடல்களை அர்ப்பணி செய்தனர்.

இந்த நிலையில் முச்சக்கர வண்டி சாரதியான வீரபாண்டி அம்மாவுக்காக பாடல் பாடினார். அவரின் தாய் கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலை செய்து வருகின்றார்.

இது வரையும் அவர் பட்டு புடவை அணிந்தது இல்லை என்று கூறி சர்ப்ரைஸாக வீரபாண்டி புடவை வாங்கி கொடுத்து அம்மாவுக்கு அழகு பார்த்தார்.

மேலும் அங்கு ஒரு திருப்பமாக வீரபாண்டிக்கு ஜீ தமிழ் குழுவினர் முச்சக்கர வண்டி வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

அந்த முச்சக்கரவண்டியில் நடுவர்களாக இருக்கும் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் அரங்கத்தில் பயணித்த காட்சிகளும் ஒளிபரப்பாகி நெகிழ வைத்திருந்தது.

அதேபோல வயதான போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பாலமுருகனின் வீட்டை சரிகமப நிகழ்ச்சி குழுவினர் முழுமையாக கட்டி கொடுத்திருக்கின்றனர்.

ஓலை குடிசை தற்போது சரிகமப பாடகர் பாலமுருகனின் வீடாக மாறியிருப்பது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.