5ஜி ஸ்மார்ட்போன்கள்! அட்டகாசமான சிறப்பம்சங்கள்

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் பல வெளியாகும் நிலையில், இந்த மாதமும் சில ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளது.

மே 16ம் தேதி iQOO Z9x, Motorola Edge 50 Fusion-ம், மே 22ம் தேதி Realme GT 6T-ம், Poco F6 மொபைல் மே 23ம் தேதியும் இந்திய சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

IQOO Z9x
மே 16ம் தேதி அறிமுகமாகும் iQOO Z9x ஸ்மார்ட்போனானது, 6.72-இன்ச் 120Hz LCD டிஸ்பிளே, AI தொழில்நுட்பமும், இரட்டை பின்புற கேமராவையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான OriginOS 4 இயங்குதளம், 12GB LPDDR4X RAM, 256GB ஸ்டோரேஜ், 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியும் உள்ளது.

Motorola Edge 50 Fusion
Motorola Edge 50 Fusion ஸ்மார்ட்போனானது இந்த மாதம் வெளியாவதுடன், 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. டூயல் ரியர் கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், செல்ஃபிக்கு 32 மெகாபிக்சல் கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

Realme GT 6T
இந்த மாதம் 22ம் தேதி அறிமுகமாகும் இந்த போனில் ஸ்னாப்டிராகன் சிப்செட், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. 6.78-இன்ச் OLED டிஸ்ப்ளே, கேமராவை பொறுத்தவரை OIS தொழில்நுட்பத்துடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் சென்சார், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா ஆகியவை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Poco F6
மே 23ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் இந்த மொபைல் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே, 20 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வெளியாகும். 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.