சும்மா இருக்கும் போட்டி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்!

  தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ டியூபர் உள்பட 117 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும்.

அவர்களின் இதய துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதன் பின்னர் போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.

சும்மா இருப்போருக்கு சான்றிதழ் வழங்கிய இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.