ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நடக்கும் கூட்டங்கள்!

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் ஆரம்பகட்ட கூட்டங்களை ஜூன் மாதம் முதல் நடத்துவதற்குப் பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பங்கேற்கும் மக்கள் சந்திப்பானது, எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி மாத்தறையில் (Matara) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குரிய உத்தியோகபூர்வ பிரச்சாரக் கூட்டமாக இது அமையும் எனக் கருதப்படுகின்றது.

கட்சிக் கூட்டங்கள் 

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் பிரச்சார கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

அது மாத்திரமன்றி, உத்தர லங்கா சபாகய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜூன் மாதமே பெயரிடப்படவுள்ளார்.

மேலும், மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் பிரதான அரசியல் கட்சிகள் பெருமளவில் நடத்தியிருந்த நிலையில், தற்போது ஜனாதிபதித் தேர்தலிற்கான ஏற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.