நீர்த்தேக்கத்தில் இருந்து மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்!

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 18 வயதுடைய பெண் எனவும் இவர் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரத்தினகிரியை சேர்ந்த பெரியசாமி திலிஷினா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் சடலம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டு பின் பிரேத பரிசோதனைக்காகச் சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த பெண் தொடர்பில் விசாரணைகள் செய்து வருவதாகவும், இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.