முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த கில்மிஷா!

தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் தமிழர் தாயகம் உட்பட பல சர்வதே தரப்புக்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் 15வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் செல்வி.கில்மிஷா பங்குபற்றியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற “Zee Tamil” சரி கம ப “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய கில்மிஷா உதயசீலன் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.