யாழில் சோகம் இராணுவ வாகனம் மோதியதில் பிறந்த நாள் அன்று பலியான யுவதி!

யாழ்ப்பாணத்தில் பிறந்த நாளன்று இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை, புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்

விபத்தில் படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார்.

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.