இலங்கையில் தமிழின படுகொலையில் பங்காற்றிய ஈரான்!

  தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிப் படை இலங்கையின் அனுராதபுர இராணுவ விமான தளத்தை தாக்கி 20 போர் விமானங்களை அழித்தது. இந்த அதிரடி தாக்குதலில் சுமார் 40 மில்லியன் டாலர் அளவிலான இழப்பு  இலங்கை  அரசிற்கு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆளில்லா விமானங்களையும், கண்காணிப்பு கருவிகளையும் வாங்குவதற்கு ஈரான் அரசாங்கத்திடம் குறைந்த வட்டியில் கடன் கேட்டது சிங்கள அரசு.

சிங்கள அரசுக்கு ரகசிய நிதியுதவி

இலங்கையின் கோரிக்கையை ஏற்ற ஈரான் அரசு, ரகசியமாக தேவையான நிதியை வழங்கியதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட  இலங்கை  அதிகாரிகள் சிலரை பயிற்சிக்காக அழைத்தது.

ஈரான் அரசின் “கிழக்கை நோக்கி” (Look East) என்ற திட்டத்தின் ஒரு அங்கமாகவே இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை மும்முரமாக ஈரான் அரசு வழங்கியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1.05 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணையை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியது. 2007 இல் மட்டும், 140.9 மில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.

நாடளாவிய ரீதியில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்
ஆயுதங்களையும், வெடி குண்டுகளையும் கொடுத்ததுடன், தன்னுடைய இராணுவ தளவாடங்களை மாதக் கணக்கில் இலவசமாக பயன்படுத்தும் உரிமையையும் இலங்கை அரசுக்கு அளித்தது ஈரான். ஈரானின் உதவிகளைப் பற்றி இலங்கையின் அமைச்சர் விமர் வீரவம்சா கூறும் போது,

“பிற நாடுகள் எங்களை கைவிட்ட போதிலும் கூட, ஈரான் அரசு எங்களை என்றுமே கைவிட்டதில்லை. இலங்கை நாடே ஈரானுக்கு நன்றிக் கடமைப்பட்டுள்ளது”

“The Island” பத்திரிக்கை ஈரானுக்கும் இலங்கைக்குமான உறவை பற்றி எழுதும் போது: “யாழ்பாணத்தில் நடைபெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தோற்கடிக்கும் தருவாயில் இலங்கை இராணுவத்திற்கு ஈரான் உதவிகள் செய்தது.

இலங்கை அரசு உதவி கோரிய உடனேயே ஈரானின் இராணுவ தளவாடங்கள் பல விமானங்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரபட்டது”என்றும் “ஈரானும் இலங்கையும் சேர்ந்து சிறு படகுகள் மூலம் தாக்குதலை நடத்துவதற்கான பல வியூகங்களை வகுத்தன” என்றும் கூறுகிறது.