திடீரென உடைந்து விழுந்த வெசாக் தோரணங்கள்!

     கொழும்பு கொம்பனி தெருவில் கட்டப்பட்டிருந்த பாரிய வெசாக் தோரணமொன்று திடீரென உடைந்து விழுந்துள்ளது.

இந்த வெசாக் தோரணமானது கடும் மழை மற்றும் காற்று காரணமாக உடைந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளும் பாரிய வெசாக் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.