ஈரான் ஜனாதிபதி மரணம் இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவு அடுத்து இலங்கையில் இன்றைய தினத்தை (21-05-2024) துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.