கனடாவில் அதிக தொழில் வாய்ப்புகள்!

கனடாவில்(Canada) அதிகளவில் வெற்றிடம் நிலவும் செயற்கை நுண்ணறிவு துறைசார் தொழில்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் கனடாவில் குடியேறுவதற்கு திட்டமிடுபவர்கள் மற்றும் கனடாவில் நல்ல சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு இந்த தகவல் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

வருடாந்த சம்பளம்
மேலும் குறித்த பட்டியலில் ஆய்வாளர், பொறியிலாளர், செயற்கை நுண்ணறிவு தரவு ஆய்வாளர், ரோபோ பொறியியலாளர், செயற்கை நுண்ணறிவு உற்பத்தி முகாமையாளர், இயந்திரக் கற்றல் பொறியியலாளர், செயற்கை நுண்ணறிவு ஒழுக்க நெறி பொறியியலாளர், தரவு விஞ்ஞானி உள்ளிட்ட பதவி வெற்றிடங்களுக்கு கூடுதல் தேவை நிலவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவி வெற்றிடங்களுக்கு 70000 முதல் 150000 டொலர்கள் வரையில் வருடாந்த சம்பளம் வழங்கப்படுவதாகத் கூறப்படுகின்றது.