கணவர் கொடுத்த பரிசுத் தொகையால் கோடீஸ்வரரான மனைவி!

பஞ்சாபை பூர்விகமாக கொண்ட பயல் தனது கணவர் கொடுத்த பரிசு தொகையின் மூலம் கோடீஸ்வரரான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளுக்கு பயலின் கணவர் ஹர்னீக் சிங் தனது மனைவிக்கு பரிசுத் தொகை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், கணவர் கொடுக்கும் பரிசுத் தொகையில் லொட்டரி வாங்குவதை பயல் வழக்கமாக வைத்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தான் வாங்கும் லொட்டரியில் “3” என்ற எண் அதிகம் இருப்பதை பயல் உறுதிப்படுத்தி வந்துள்ளார். தனது ராசி எண் என்ற காரணத்தால் அவர் லொட்டரியை இப்படி தேர்வு செய்து வந்துள்ளார்.

பயலின் 16 ஆவது திருமண நாளை ஒட்டி, அவரது கணவர் ஹர்னீக் சிங் பரிசுத் தொகை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் பயல் துபாய் டியுட்டி ஃபிரீ டிரா (DDF) லொட்டரி வாங்கியுள்ளார்.

மே 3 ஆம் திகதி இவர் வாங்கிய லொட்டரியில், பயலுக்கு 1 மில்லியன் டொலர்கள் ( இலங்கை மதிப்பில் ரூ. 29 கோடியே 98 லட்சம்) பரிசு தொகை கிடைத்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளாக தான் DDF லொட்டரி வாங்கி வருவதாகவும், ஒவ்வொரு முறையும் தனது கணவர் மற்றும் குழந்தைகள் பெயரில் மாற்றி மாற்றி லொட்டரி வாங்குவதாக பயல் தெரிவித்துள்ளார்.