யாழில் சோகம் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை
ஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

48 வயதுடைய சிங்கரத்தினம் சசிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.