வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

வெசாக் தினத்தையொட்டி, வெசாக் தோரணங்கள் மற்றும் தனசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வெசாக் தோரணங்கள்
இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 18,000க்கும் மேற்பட்ட பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஆணையாளர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 வெசாக் தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 3000க்கும் மேற்பட்ட தனசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அவர்களின் சுகாதார தரம் தொடர்பில் முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.