யாழில் மான் கொம்புடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது  இன்று (2024.05.24) இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 42 வயதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.