யாழ் வெதுப்பகம் ஒன்றில் றொட்டி வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள வெகப்பகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக ரொட்டி ரோல் வாங்கிய ஊடகவியலாளருக்கு பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது.

யாழ். மருதானர்மடத்தில் உள்ள காங்கேயன் வெதுப்பகத்தில் நபரொருவர் வாங்கிய ரோலில் துருப்பிடித்த (4 inch) கம்பி காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (24.5.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

ரோலில் துருப்பிடித்த கம்பி காணப்பட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.