கனடா மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் தவறான வீடியோவை அனுப்பிய காதலன்!

திருமணத்திற்கு சில தினங்களே இருக்கும் நிலையில் வவுனியாவில் வந்து தங்கியிருக்கும் கனடா மாப்பிள்ளை ஒருவருக்கு அவரது வருங்கால மனைவியுடன் தவறாக இருந்த வீடியோக்களை அனுப்பிய காதலன் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டு பின்னர் அது கனடா மாப்பிளையின் வேண்டுகோளுக்கு இணங்க மீளப் பெறப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மணப்பெண்ணும் குறித்த காதலனும் பாடசாலைக் காலத்தில் காதலித்து வந்துள்ளார்கள். அதன் பின்னர் காதலன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து, குறித்த பெண் அவனை விட்டு பிரிந்துள்ளார்.

இதனால் பல தடவைகள் பெண்ணின் வீ்ட்டுக்கு காதலன் சென்று வன்முறையில் ஈடுபட்டு ஒரு தடவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

அதன் பின்னர் கடந்த ஆண்டும் வெளிநாட்டு நபருக்கும் பெண்ணுக்கு நிச்சயமாகிய நிலையில் இனந்தெரியாதவர்களால் பெண்ணும் காதலனும் உறவு கொள்ளும் வீடியோ அனுப்பப்பட்டு திருமணம் குழப்பட்டுள்ளது.

பின்னர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்ற 43 வயதான விவாகரத்தான மாப்பிள்ளை ஒருவருக்கு குறித்த பெண் நிச்சயம் செய்யபட்டிருந்தார்.

இந்த நிலையில் அடுத்தவாரம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் மாப்பிள்ளையின் வாட்ஸ் ஆப்’க்கு இனந்தெரியாத இலக்கத்தில் இருந்து மணமகளுடன் தவறாக ஒருவன் உறவு கொள்ளும் வீடியோக்கள் அனுப்பப்பட்டிருந்தது.

ஏற்கனவே குறித்த பெண்ணின் காதல் தொடர்பாக கனடா மாப்பிள்ளைக்கு தெரியப்படுத்தியிருந்துள்ளார்கள். அதனால் குறித்த தவறான வீடியோ வந்தது தொடர்பாக மணமகளுக்கு மாப்பிளை தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து மணமகளின் உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டதாகத் தெரியவருகின்றது.

எனினும், பொலிஸாரின் முறைப்பாட்டை மாப்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க மீள்ப் பெறப்பட்டுள்ளது.

எனினும், காதலனின் வீடு தேடிச் சென்ற கனடா மாப்பிள்ளை குறித்த காணொளி தொடர்பாக அவனிடம் விளக்கம் கோரிய போது, குறித்த காணொளிகளை தன்னால் அனுப்பப்படவில்லை என காதலன் கூறியுள்ளார்.

மேலும், காதலியுடன் இருந்த கோபம் காரணமாகவும் தான் சிறைக்கு சென்ற விரக்தி காரணமாகவும் தன்னுடன் காதலி தவறாக இருந்த காட்சிகளை சமூகவலைத்தளத்தில் 2019ம் ஆண்டு வெளியிட்டு அந்த சமூகவலைத்தளம் பின்னர் முடக்கப்பட்டதாகவும் காதலன் கனடா மாப்பிள்ளைக்கு கூறியுள்ளார்.

இதேவேளை காதலன் தற்போது திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் உள்ளதை கனடா மாப்பிள்ளை அவதானித்துள்ளார்.

கனடா மாப்பிள்ளைக்கு அனுப்பபட்ட வாட்ஸ் ஆஒப் இலக்கம் அனுராதபுரத்தைச் சேர்ந்த இறந்து போன சிங்கள வயோதிபர் ஒருவரின் பதிவில் உள்ளதாகத் தெரியவருகின்றது.

கனடா மாப்பிள்ளையின் தொலைபேசி இலக்கம் மணப்பெண்ணான யுவதியின் நெருங்கிய உறவுகளுக்கே தெரிந்த நிலையில் குறித்த வீடியோ தனக்கு அனுப்பப்பட்டது தொடர்பில் யுவதியின் நெருங்கிய உறவு யாராவது தொடர்புபட்டிருக்கலாம் என மாப்பிள்ளை சந்தேகப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.