தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்திய கார்த்திகைப் பூ

தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாக தெரிவித்த தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் , அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு அவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்

தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது

தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரியமானதும், தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர்.

தமிழ் தேசிய பரப்பிலேயே கார்த்திகைப் பூ குறித்த ஒரு காலத்தில் மாத்திரம் பூக்கின்ற தனித்துவமான மலர் என்பதை கருத்தில் கொள்ளாது குறித்த நிறுவனம் கால்களுக்கு அணியும் பாதனைகளில் அதனைப் பதித்து தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது.

குறித்த விடயமானது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே பார்க்கிறேன். குறித்த நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ள பாதணிகளை மீள பெற வேண்டும். அத்துடன் அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தார்.