கருடன் பட விமர்சனம்!

விடுதலை முதல் பாகம் திரைப்படத்திற்கு பின் ஆளே மாறிவிட்டார் சூரி. விடுதலை படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து கதையின் நாயகனாகவே நடிக்க வைத்து வருகிறது.

கருடன்
கொட்டுக்காளி, கருடன், விடுதலை இரண்டாம் பாகம் என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ள சூரியின் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கருடன். இப்படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் விமர்சனம்
இந்த நிலையில் படத்தை ரிலீஸுக்கு முன் படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

“சிறந்த ஆக்ஷன் ட்ராமா திரைப்படம் கருடன். வலுவான எமோஷன் மற்றும் வெறித்தனமான ஆக்ஷன். சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனின் கதாபாத்திரங்கள் சிறப்பு. இடைவேளை காட்சி, ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸில் சூரியின் சம்பவம்” என விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.