யாழில் சோகம் விபரீத முடிவால் உயிரிழந்த இளம் பெண்!

யாழ்ப்பாணம் நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி நேற்றைய தினம் 2:00 மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 24 வயதான குகதாஸ் ரம்மியா இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த யுவதியின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.