பாடசாலைகள் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளை மூடும் அதிகாரம் வலயக் கல்விப் பணிமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வலக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

காலநிலை சீர்கேடு காரணமாக இன்றைய தினமும் நாட்டின் சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சகல பாடசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளது.

களுத்துறை, ரத்தினபுரி, கேகாலை மாவட்ங்களின் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது