வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்!

வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில், வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அனைவரும் தங்களது வாகனங்களின் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன சாரதிகள்
இதனடிப்படையில், வாகன சாரதிகள் அனைவரும் வீதிகளில் பயணிப்பதற்கு முன்னர் தங்களது வாகனங்களின் ஓட்டுனர் உரிமம் , வாகன காப்பீடு (Vehicle Insurance) , வாகன வருமான அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமங்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கனரக வாகனங்களில் பயணிக்கும் சாரதிகள் அனைவரும் கனரக வாகன அனுமதிப்பத்திரத்தை எடுத்துச் செல்லுமாறும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.