சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

2023ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று (2024.06.08) ஆரம்பமானது.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நேற்று ஆரம்பமாகவிருந்த போதிலும், நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பரீட்சை இன்று வரை பிற்போடப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

கடந்த மே மாதம் 6ம் திகதி ஆரம்பமாகிய பரீட்சை 15ம் திகதி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.