இலங்கையர்களை இராணுவ சேவைக்கு நிராகரிக்கும் பிரபல நாடு!

   ரஷ்யாவில் இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதியளித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ரஷ்யா வெளிவிவகார அமைச்சா் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையர்களை இராணுவ சேவைக்கு எடுக்கமாட்டோம்; ரஷ்யா! | Not Take Sri Lankans Russia Military Service

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதி

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடையங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை தலையிடுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் ரஷ்யாவில் இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும் ஜூன் 26-27 திகளில், இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ரஷ்ய அதிகாரிகளுடன் இந்த பிரச்சினையை விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.