யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் மாயம்!

யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் நேற்று (10-06-2024) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை உறவினர்களும், ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.