கொழும்பு விடுதியில் மீட்க்கப்பட்ட சடலம்!

கொழும்பு – பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடுதியில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துாக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் தலங்கம பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து விரைந்து வந்த பொலிஸார் நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.