சஜித்தின் யாழ் விஜயத்தால் குழப்பம்!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நேற்றையதினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கி வைத்துள்ளதோடு குறித்த பேருந்துக்கான பூஜை வழிபாடுகள் வழக்கம்பரை ஆலயத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் அங்கு பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலர் குழுமியிருந்தனர்.

அசௌகரியங்கள்
இதன்போது அங்கு கடமையில் இருந்த சஜித்தின் ஊடகப் பிரிவினர் அநாகரீகமான முறையில் உடையினை அணிந்திருந்தனர்.

இதனால் அங்கிருந்த மாணவர்கள் முகம் சுழித்து அசௌகரியங்களை எதிர்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் சஜித் பிரேமதாச பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு தயாராகும் போது ஊடகவியலாளர்கள் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

எனினும், அங்கிருந்த சஜித்தின் பாதுகாப்பு பிரிவினர் ஊடகவியலாளர்களின் கேமராவினை கையால் தட்டி புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது குழப்ப நிலை ஏற்பட்டது.