மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இந்த ஆண்டின் (2024) இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ (Manjula Fernando) இன்று (18) தெரிவித்துள்ளார்.

இதன்படி, உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூலமான கருத்துக்கள் ஜூலை 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வாய்மூலமான கருத்துக்கள் ஜூலை 9ஆம் திகதி நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டண திருத்தம்
இந்த முறை மேற்கொள்ளப்படவுள்ள கட்டண திருத்தத்தில் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

அதன் படி, குறைக்கப்பட்ட கட்டணத்தின் சதவீதங்கள் ஜூலை 15ம் திகதி அறிவிக்கப்படும்.