நாட்டை வந்தடைந்த இலங்கை அணி!

ரி 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (19) காலை இலங்கை வந்தடைந்தது.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரி 20 இலங்கை  கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க,

வீரர்கள் சரியாக விளையாடாததால்  ரி 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலக நேரிட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் அணித் தலைவர் மற்றும் வீரர் என்ற ரீதியில் இதற்காக தான் வருந்துவதாகவும் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

வீரராகிய நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். வீரர்களாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை, எனவே பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்படவில்லை என்றும் அவர் கூறினார்