கெஹலிய தொடர்பில் புதிய முறைப்பாடு பதிவு!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சினால் வழங்கப்பட்ட 2 உத்தியோகபூர்வ வாகனங்களை அமைச்சர் பதவியை இழந்ததன் பின்னர்  மீள ஒப்படைக்கப்படாமல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிவிப்பு மேலே இணைக்கப்பட்டுள்ளது.